தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் எதிர்பார்த்த முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாகத் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன. இதனால், இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடர் எதனுடன் தொடங்கும் என்ற மிகப்பெரிய விவாதமும் எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு அவைக் கூடியதும் முதலில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' முறைப்படி பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'தேசிய கீதம்' இசைக்கப்பட்டு, எந்தவித சலசலப்பும் இன்றி பேரவை நிகழ்ச்சிகள் சுமுகமாகத் தொடங்கியுள்ளது.
ஆளுநர் உரை தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் தனது முறைப்படியான உரையைத் தொடங்கி தற்போது ஆற்றி வருகிறார். புதிய த.வெ.க அரசின் கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் குறித்த முக்கிய அம்சங்கள் இந்த ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.
திமுக ஆட்சி.. ஆளுநர் வெளிநடப்பு
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில், பேரவை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே இசைக்கப்பட்டதை முன்வைத்து, அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் அதிருப்தி தெரிவித்தார். இதன் காரணமாக 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கூட்டத்தொடர்களையும் அவர் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7