தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

Author: Christon தமிழ்நாடு
சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. அதன்படி, தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் நிலவி வருகின்றன. கடந்த ஜூலை 27-ஆம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 28-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,240 சரிந்து ரூ.1,05,720-க்கும், நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் சரிவைக் கண்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.