தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வரவுள்ளது.
இதேபோல், அதிமுக-வைச் சேர்ந்த சி.வி. சண்முகம் சட்டமன்றத் தேர்தலில் வென்றதால் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போதைய பலத்தின்படி இந்த எம்.பி பதவி தவெக-விற்கே கிடைக்கும் என்பதால், டெல்லி நாடாளுமன்றத்திலும் தவெக நுழையவுள்ளது.
மாநிலங்களவைக்குச் செல்லும் வேட்பாளர் யார்?
டெல்லியில் கட்சியின் குரலாக ஒலிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்த ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் ஆலோசித்து வருகிறார். அ.தி.மு.க-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சரான மூத்த அரசியல்வாதி கு.ப. கிருஷ்ணனின் பெயர் இப்பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த இவருக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த அனுபவம் இருப்பது சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வியூகம்
மறுபுறம், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும், மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலிலும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் பெயர் அடிபடுவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக-வில் சகாயம் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் சூழலில், அண்மையில் நடைபெற்ற விஜய் அமைச்சரவை பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்றிருந்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7