நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவையில், கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விரிவாகப் பேசினார்.
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலத்தில் ஏராளமான கொலைகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தைக் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் இருதரப்பு கோஷ்டி மோதல் அல்ல என்றும், போதைப்பொருள் புழக்கம் குறித்துக் காவல்துறையிடம் தகவல் கொடுத்த காரணத்திற்காகவே 20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சென்னை திருவொற்றியூரில் போதை பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பள்ளி மாணவர் தனுஷ் படுகொலை செய்யப்பட்டது, அம்பத்தூரில் ஆட்டோவில் பெண் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது மற்றும் காஞ்சிபுரத்தில் இரு இளைஞர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவங்களையும் அவர் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க. அரசு, மாநிலத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். போதை கலாச்சாரம் மற்றும் வன்முறைக்கு எதிராகப் பள்ளி, கல்லூரிகளில் தொடர் விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வகுப்புகளை நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

LIVE 24 X 7