மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக ஆட்சி தொடராது என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அவர் எந்தக் கோணத்தில் அந்தக் கருத்தை கூறினார் என்பது எனக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து கட்சிகளும் தங்கள் அளித்த உறுதியை நிச்சயமாக காப்பாற்றும். விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தவெக அரசுக்கு முழு ஆதரவாக உள்ளன என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே தவெக அணிக்கு ஆதரவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட்டணியில் இணைந்து செயல்படுவதாகவும் அறிவித்துள்ளது. இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து, இந்த அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே நிலைப்பாட்டைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடைப்பிடிக்கிறது. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் தவெக அரசு தனது ஐந்தாண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அந்தக் கூட்டத்தில் என்ன அறிவிப்பு வெளியாகும் என்பது அங்கு பேசும்போதுதான் தெரியும். இப்போது அதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது. தேநீர் விருந்து என்ற அடிப்படையில்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்" என திருமாவளவன் கூறினார்.

LIVE 24 X 7