"திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நாம்தான் ஆட்சி செய்கிறோம்" என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மேடையில் உரையாற்றிய அவர், "தேர்தல் தோல்விகளை கண்டு திமுக சிதறாது. நாம் சோகமாக இருக்கத் தேவையில்லை. வெற்றி, தோல்வி என்பதைச் சமமாகக் கருதிப் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தொண்டன்தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது.
முந்தைய திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்; அவை தொடர்கின்றன. திமுக கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசும் செயல்படுத்தி வருகிறது. திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நாம்தான் ஆட்சி செய்கிறோம். இந்தத் திட்டங்களை யாராலும் மாற்றிவிடவோ, தடுத்துவிடவோ முடியாது.
36 பேர் கொண்ட குழு அமைத்து தேர்தல் தோல்வி குறித்து அனைவரிடமும் கருத்துக்கேட்டு வருகிறோம். திமுக நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.
நாம் எல்லா பணியும் செய்து தோல்வியடைந்தோம்; அவர்கள் எந்த பணியையும் செய்யாமல் வெற்றி பெற்றனர். சமூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. சிறு குழந்தைகளை பரப்புரை செய்ய வைத்து அவர்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். பெற்றோர்கள், குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
திமுகவின் கதை முடிந்துவிட்டது என நமது இன எதிரிகள் நினைக்கிறார்கள். ஆனால், நமது கழகம் தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது என்பதுதான் நமது வரலாறு. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LIVE 24 X 7