K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=600&order=created_at&post_tags=on

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

ஏஐ தொழில்நுட்ப தாக்கம்: பெண்களுக்கு அதிக பாதிப்பு- ஐ.நா. ஆய்வு தகவல்

உலகெங்கிலும் உள்ள பெண் ஊழியர்களில் சுமார் 28% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது

நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் – முன்னாள் மேலாளரை தாக்கிய வழக்கில் நடவடிக்கை

தாக்குதல் வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் உன்னி முகுந்தன் ஆஜராக சம்மன்

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி கார்களின் விலை அதிரடி குறைப்பு

மத்திய அரசு, சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28%-லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளதன் பலனை மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - ஜாய் கிரிஸில்டா

சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

விசா கட்டண உயர்வு: விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்- 3 மணி நேரம் தாமதமான விமானம்!

ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: விஏஓ அதிரடி கைது

திருவண்ணாமலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது: திரை பிரபலங்களுக்கு சப்ளை செய்தாரா?

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெயர்ந்து விழுந்த மேற்கூரை.. ரேஷன் கடையில் விபத்து | Myladuthurai | Ration Shop | Kumudam News

பெயர்ந்து விழுந்த மேற்கூரை.. ரேஷன் கடையில் விபத்து | Myladuthurai | Ration Shop | Kumudam News

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் 3 அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி!

2023-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இது, வருவாய் குறைவில் தமிழகத்தை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது.

பாலியல் வழக்கில் ஆஜராகாத சாமியார்: சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தங்கத்தின் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கு விற்பனை!

சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக, சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,880 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பண்டிகை காலத்தில் நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் ஒரே QR பயணச்சீட்டு வசதி! 'CHENNAI ONE' செயலியைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில்களை ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்த உதவும் 'CHENNAI ONE' என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: இன்று முதல் அமல் -அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு

மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று (செப். 22, 2025) முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை குறையும் என்பதால், மக்களின் கையில் பணம் மிச்சமாகும்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - செபி அறிவிப்பு!

அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி தெரிவித்துள்ளது. விசாரணையில் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது.. ரூ.6 லட்சம் பறிமுதல்!

கரூரில் கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

'தமிழகத்தில் வேறு மொழிகள் திணிக்கப்படவில்லை'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாநில வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி | PM Modi | Kumudam News

மாநில வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி | PM Modi | Kumudam News

கோவை: கள்ளக் காதலில் கொடூரம்! சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!

கோவையில், தொழிலதிபர் பாலுசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.