K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2000&order=created_at&post_tags=men

லீவ் நாளில் வேலை காட்டப்போகும் கனமழை - மக்களே நாளைக்கு உஷார்!!

தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.. ராமதாஸ் ஆக்ரோஷம்!

தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்துள்ள சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளி கூண்டில் செந்தில் பாலாஜி.. விசாரணையை தள்ளிவைக்க நீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை தள்ளிவைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை | Kumudam News 24x7

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பாடகி சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது | Kumudam News 24x7

பாடகி சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - இலங்கை துணைத் தூதர் ஞானதேவா

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இலங்களை துணைத் தூதர் ஞானதேவா நம்பிக்கை அளித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING | மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

#BREAKING || அக்.15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

14 மாவட்டங்களில் கனமழை - இந்த முறை மிஸ் ஆகாது எச்சரிக்கை ..!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

#BREAKING: சர்ச்சை பேச்சு.. மகாவிஷ்ணு வழக்கில் புதிய திருப்பம்

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

பேருந்தில் நடத்துனருக்கு கத்திக்குத்து..பயணிகளை அலறவிட்ட இளைஞர்!

பெங்களூருவில் பேருந்துக்குள் நடத்துனருக்கு கத்திக்குத்து.

அமைச்சரான செந்தில் பாலாஜி... அமாவாசைக்குள் தாங்காது.. முன்னாள் அமைச்சர் கருத்து!

30 நாளில் அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோய்விடும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆருடம் தெரிவித்துள்ளார்.

#BREAKING || கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்

மீனவர்கள் பிரச்னை.. பாமக போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை பயன்படுத்திய செவிலியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

பாலியல் சீண்டல்.. மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

32,500 பேருக்கு ஊதியம் கொடுக்கல.... மாநில அரசு என்ன பண்ணுது? - ராமதாஸ் கேள்வி

மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என பாமக நிறுவனம் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்... தி.மலையில் உச்சக்கட்ட பரபரப்பு

திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.