K U M U D A M   N E W S

மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

"அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்துங்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு

தனது அனுமதியின்றி கட்சியின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு ராமதாஸ் தரப்பில் மனு

வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி மீது வழக்கு

மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக பாஜக மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி

வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பிரதமர் மோடி பார்வையிட உள்ள கண்காட்சி...அரியலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக வெளிநாடு பயணம்... முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

பிரதமர் மோடி இன்று (ஜூலை 23) இங்கிலாந்திற்கு அரசு முறை பயணமாக செல்லும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலியாகிய துணைத் தலைவர் பதவி: அடுத்த மாதம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கு.. ராணா டகுபதிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

திரைத்துறையினர் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ராணா டகுபதிக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.