K U M U D A M   N E W S

ராஜேந்திர சோழனுக்கு சிலை.. கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் பிரதமருக்கு நன்றி!

அரியலூர் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் மிகப் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கோமகன் நன்றி தெரிவித்துள்ளார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

சிறுநீர் கழித்த விவகாரம்.. காவலரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ வைரல்!

காவல் உதவி மைய சுவற்றில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை முதல் கிட்னி திருட்டு வரை .. எல்லா குற்றத்திலும் திமுகவிற்கு பங்கு: தமிழிசை பேட்டி!

தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.