பெங்களூருவையும் விட்டு வைக்காத கனமழை..துணை முதல்வர் நேரில் ஆய்வு
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் குழு அமைப்பு
மழைநீர் தேங்கியதன் காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்
கனமழை எதிரொலியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.
சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
வேலூரில் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்
சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் ரயிலுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு