தொழில்நுட்பம்

2030-க்குள் 4 புதிய மின்சார கார்கள்... டாடா மோட்டார்ஸின் மெகா திட்டம் !

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், 2030-31க்குள் 4 புதிய EV கார்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

2030-க்குள் 4 புதிய மின்சார கார்கள்... டாடா மோட்டார்ஸின் மெகா திட்டம் !
இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் தனது முன்னிலை இடத்தை தக்கவைத்துக்கொள்ள டாடா மோட்டார்ஸ் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, 2030-31 நிதியாண்டுக்குள் 4 புதிய மின்சார கார்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், அதே காலகட்டத்தில் இந்திய EV சந்தையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை பெறுவதே இலக்கு என தெரிவித்துள்ளது.

இந்திய மின்சார வாகனச் சந்தை தற்போது 'Early Adopters' நிலையிலிருந்து 'Early Majority' நிலைக்கு மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள டாடா மோட்டார்ஸ், இனி பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய EV சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை ‘ஆரம்பகாலப் பயன்பாட்டாளர்கள்’ நிலையிலிருந்து ‘ஆரம்பகாலப் பெரும்பான்மையினர்’ (early majority) நிலைக்கு மாறியுள்ளது.

“தற்போது, ​​ஆரம்பகாலப் பெரும்பான்மையினரும்’ மின்சார வாகனங்களைப் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பகால மற்றும் பிற்காலப் பெரும்பான்மை (late majority) வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரிடையேயும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவோம்” என்று TMPV நிறுவனம் கூறியுள்ளது.