நீட் தேர்வு விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்பி வீடியோ ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மெட்டா அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளைச் சீரமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைக் கடந்து உலக சாதனை படைத்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அந்த வீடியோ ஃபேஸ்புக் தளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அந்த வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டதாகவும், பின்னர் உடனடியாக அது மீட்டெடுக்கப்பட்டதாகவும் மெட்டா நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, வீடியோ நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.

LIVE 24 X 7