உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், ஆண்டுதோறும் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு புதிய மாடலிலும் மேம்பட்ட அம்சங்கள் இடம்பெறுவதால், அடுத்த தலைமுறை ஐபோனுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்கள் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாடல்களில் செயல்திறனை மேம்படுத்தும் இரண்டு முக்கிய அப்டேட்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 8GB RAM-க்கு பதிலாக, புதிய ஐபோன் 18 மற்றும் 18e மாடல்களில் 9GB RAM வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன், போனின் வேகம் மற்றும் செயல்திறனை மேலும் உயர்த்தும் வகையில் புதிய A20 Processor Chip அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், ஐபோன் 18 Pro மாடலில் கேமரா தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிரைமரி கேமராவில் Variable Aperture வசதி வழங்கப்படலாம். இதன் மூலம் லென்ஸுக்குள் நுழையும் ஒளியின் அளவை பயனர்களே கைமுறையாக கட்டுப்படுத்த முடியும்.
இந்த புதிய வசதி மூலம் அதிக வெளிச்சத்தில் புகைப்படங்கள் மங்குவதைக் குறைப்பதுடன், பின்னணி மங்கல் (Background Blur) மற்றும் புகைப்படத்தின் தோற்றத்தை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி, தொழில்முறை தரத்தில் படங்களை எடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர தயாரிப்பு அறிமுக நிகழ்வு வழக்கம்போல் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம் என்றும், அதில் புதிய ஐபோன் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த அம்சங்கள் குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7