ஆப்பிள் நிறுவனம் தனது . இந்த விலை உயர்வு இந்தியா உள்பட உலகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் மெமரி சிப்கள் மற்றும் ரேம் விலை கணிசமாக உயர்ந்துள்ளதையே காரணமாகக் காட்டி, ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை 20 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி, M5 Pro சிப் கொண்ட 14 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலின் விலை ரூ.2,49,900-லிருந்து ரூ.2,99,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், 13 இன்ச் ஐபேட் ஏர் பேஸ் மாடலின் விலை ரூ.84,900-லிருந்து ரூ.1,19,900 ஆக உயர்ந்துள்ளது. இது 41.22 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த திடீர் விலை உயர்வைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்தன.
இருப்பினும், நிறுவனத்தின் அதிக விற்பனையான ஐபோன் மாடல்களின் விலையில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களின் வேகமான வளர்ச்சி காரணமாக, உலகளவில் மெமரி சிப்கள் மற்றும் ரேம் தேவையும் விலையும் அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் மின்னணு சாதனங்களின் விலையிலும் எதிரொலிப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் மெமரி சிப்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு 3 மாதங்களிலும் குறைந்தபட்சம் 50% வரை விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

LIVE 24 X 7