K U M U D A M   N E W S

தமிழ்நாடு

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!

தமிழ்நாடு சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. இன்று விவாதம்..!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தல்.. கார் ஓட்டுனர் கைது..!

கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

தமிழகத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் - வேல்முருகன் பேட்டி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது இருப்பினும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

சுட்டெரிக்கும் வெயில்.. வெப்பத்தை குறைக்க தண்ணீரை ஸ்ப்ரே செய்யும் நவீன மெஷின்..!

திருப்பூரில் வெப்பத்தை தணிக்கும் வகையில், பேக்கரியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தண்ணீரை ஸ்ப்ரே செய்யும் கருவி பொருத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரயிலில் நெல்லைக்கு 8 கிலோ கஞ்சா கடத்தல்.. போலீசார் விசாரணை..!

மதுரை ரயில் நிலையத்திற்குள் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல்லைக்கு 8 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வந்த சிறுவன் உள்பட மூவர் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

24 ஆண்டுகளுக்கு பிறகு பிடிப்பட்ட ரவுடி.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து.. காவல் துறையினர் விசாரணை

இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.