சாதி ரீதியாக அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி எஸ்.பி.அருண்குமார் இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல வண்ணங்களில் மிளிரும் வெளிச்சத்தில் இன்று பலரும் நின்று போட்டோ ஷூட் எடுக்கும் சென்னையின் நேப்பியர் பாலம், ஆங்கிலேயரால் ஒரு விசித்திரமான காரணத்திற்காக தான் கட்டப்பட்டது என்ற வரலாறு தெரியுமா? அது என்ன காரணம்..நேப்பியர் பாலத்தின் கதை என்ன என்பதை விவரிக்கிறது இந்த சென்னை தின சிறப்பு கட்டுரை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் வரலாறு என்று எடுத்துக் கொண்டாலே சென்ட்ரல் ரயில் நிலையம், லைட் ஹவுஸ் போன்ற குறிப்பிட்ட சில கட்டடங்களின் கதைகளை மட்டுமே சென்னவாசிகள் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் இன்றளவும் சென்னையின் கதையை தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு சுவாரஸ்மிக்க கதையை சுமந்துக் கொண்டு வங்கக் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது ”ஐஸ் ஹவுஸ்”.
இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன… குக்கிராமங்கள் விரிவடைந்து பல பெரிய நகரங்கள் உருவாகியிருக்கின்றன… ஆனால் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய நகரமாக கம்பீரமாக நிற்கிறது ‘சென்னை’… இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக கட்டப்பட்ட கோட்டை உள்ளது… கிட்டத்தட்ட 385 ஆண்டுக்கால நினைவுகளை சுமந்துக் கொண்டு, வங்கக் கடலை வெறித்தப்படி, மிடுக்காகவும், தமிழ்நாட்டின் முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் இடமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது அந்த கோட்டை… அதுதான் கறுப்பர் நகரமான சென்னையின் முக்கிய புள்ளியாக இருக்கும் ”புனித ஜார்ஜ் கோட்டை”…
கடுமையான வெயிலால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாட்டு மக்களை குளிர்விக்கும் விதமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை தெரியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியாது என ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
''ராகேஷ் பால் தேச பக்தராகவும், அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் விளங்கினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறப்படும்'' என்று இந்திய கடலோர காவல் படை இரங்கல் தெரிவித்துள்ளது.
''மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது'' என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ், முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.