நேற்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் நிலையற்ற சூழல்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடுமையான ஊசலாட்டம் நிலவி வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்து நிம்மதியளித்த தங்கம் விலை, இன்று மீண்டும் அதே அளவிற்கு உயர்ந்து பழைய விலையை அடைந்துள்ளது.
விலையேற்றத்தின் பின்னணி
நேற்று முன்தினம் ரூ.1,14,880-க்கு விற்பனையான தங்கம், நேற்று ரூ.1,13,680-க்குக் குறைந்தது. ஆனால், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,880-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.280-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,80,000 ஆக உள்ளது. சர்வதேச முதலீட்டுச் சந்தையில் நிலவும் மாற்றங்களே இந்தத் திடீர் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

LIVE 24 X 7