கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று மாற்றமின்றி நீடித்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் விலை மீண்டும் 15 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனையானது. இந்நிலையில், வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (மே 19) தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரமே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
நேற்று கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்திருந்த வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,00,000-க்கும் முந்தைய நாளின் அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7