டெல்லியின் ரோஹிணி பகுதியில் ரூ.700 கடன் தொகையைத் திரும்பக் கேட்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்ற 30 வயது நபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரைத் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முகேஷ் யாதவ் என்பவரின் சகோதரர் சதீஷ், இச்சம்பவத்தில் முதன்மை குற்றவாளியான சச்சின் (29) என்பவரிடம் ரூ.700 கடன் வாங்கியிருந்தார். சச்சின் பலமுறை அப்பணத்தைத் திரும்பக் கேட்டு வந்த நிலையிலும் சதீஷ் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சச்சின் மீண்டும் சதீஷிடம் பணத்தைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த முகேஷ் யாதவ், தன் சகோதரனுக்கு ஆதரவாகப் பேசித் தகராறில் தலையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சச்சின் தான் வைத்திருந்த கத்தியால் முகேஷின் வலது தோள்பட்டையில் பலமாகக் குத்தியுள்ளார்.
காயமடைந்த முகேஷ் உடனடியாக அக்வர்சேன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிலைமை கவலைக்கிடமானதால், எய்ம்ஸ் அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
முகேஷின் உயிரிழப்பைத் தொடர்ந்து, பேகம்பூர் காவல் நிலையப் பகுதியில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு விடுதிகளில் சோதனை நடத்தி மூன்று பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளியான சச்சின் மீது ஏற்கனவே 10 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் பேகம்பூர் காவல் நிலையத்தின் குற்றப் பட்டியலில் உள்ளவர் என்பதும் தெரியவந்தது. அவருடன் சேர்ந்து குற்றத்தில் ஈடுபட்ட பங்கஜ் (23) மற்றும் அபிஷேக் (22) ஆகிய இரு ஆட்டோ ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LIVE 24 X 7