K U M U D A M   N E W S

Murder

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=murder

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்.. மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை!

சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே இளைஞர் படுகொலை.. மேலும் இருவர் கைது!

திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. மூன்று குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகள் தனது தந்தையால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்.. குடிபோதையில் ஒரு வயது மகனை கொலை செய்த கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த நபர் தனது ஒரு வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பிரேக் அப் செய்த காதலி.. விரக்தியில் இன்ஸ்டாகிராமில் 'போஸ்ட்' போட்ட இளைஞர் அடித்து கொலை!

தனது காதலியை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிரிக்கும் எமோஜியால் ஏற்பட்ட மோதல்.. ராஜஸ்தானில் இளைஞர் படுகொலை!

ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

பெங்களூருவில் கொடூரம்.. மகளின் கண்முன்னே மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. கொலையா? தற்கொலையா?

விருத்தாசலம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூரில் பயங்கரம்: நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன் அடித்துக் கொலை!

சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!

தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கோவை: கள்ளக் காதலில் கொடூரம்! சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!

கோவையில், தொழிலதிபர் பாலுசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கக் கடத்தல் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

ஓசூரில் த.வா.க நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை – விசாரணையில் இறங்கிய போலீஸ்

ஓசூர் அருகே த.வா.க ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

காதல் விவகாரம்: மயிலாடுதுறையில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!

மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமேரிக்காவில் இந்தியர் கொடூர கொலை.. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை- அதிபர் டிரம்ப் உறுதி!

அமேரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கொடூரமாக கொல்லப்பட்டதுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு: பொக்லைன் ஓட்டுநர் கொடூர கொலை.. நண்பர் கைது!

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.