தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் சதவீத அடிப்படையில் பெரிய உயர்வு தெரிந்தாலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் 73.63% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை அது கணிசமாக உயர்ந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட SIR பணிகள் மூலம் சுமார் 74 லட்சம் போலி மற்றும் இரட்டை வாக்குகள் நீக்கப்பட்ட பிறகு, தற்போதுள்ள 5.73 கோடி வாக்காளர்களில் சுமார் 4.85 கோடி பேர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இது கடந்த தேர்தலை விட 22 லட்சம் வாக்காளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நிலவரம்: சதவீதம் உயர்வு; எண்ணிக்கை சரிவு
சென்னையைப் பொறுத்தவரை வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் சற்று முரணாக அமைந்துள்ளன. கடந்த 2021 தேர்தலில் சென்னையில் 60% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை அது 83.74% ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கடந்த முறை 24.16 லட்சமாக இருந்த வாக்குகள், இந்த முறை 23.7 லட்சமாகக் குறைந்துள்ளன. அதாவது சதவீத அளவில் உயர்வு தெரிந்தாலும், கடந்த தேர்தலை விட சென்னையில் 47,322 வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன.
பட்டியல் சீரமைப்பின் தாக்கம்
சென்னையில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறையத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சீரமைப்பே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. போலி முகவரிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதால், ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாகவே பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறைந்தாலும், சதவீத அடிப்படையில் பெரிய உயர்வு தென்படுகிறது.

LIVE 24 X 7