K U M U D A M   N E W S

விளையாட்டு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&category_id=4

13 வருட டேட்டிங்.. 7 வருட திருமண வாழ்வு.. கணவரைப் பிரிந்த சாய்னா: யார் இந்த காஷ்யப்?

”நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி” என இந்தியாவின் ஒலிம்பிக் மெடல் வின்னரும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சாய்னா நேவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sinner: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலியன்!

3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைப்பெற்ற விம்பிள்டன் ஆடவருக்கான இறுதிப்போட்டியில், நடப்புச் சாம்பியன் அல்காரஸை வீழ்த்தி பட்டத்தை வென்றார் உலகின் நம்பர் 1 வீரர் சின்னர்.

IND vs ENG: ஸ்பின் எடுபடாத பிட்சில் அசத்திய வாஷிங்டன்.. 193 ரன் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

WWE: கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார் கோல்டுபர்க்!

'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்ற 58 வயதாகும் கோல்டுபர்க், தொழில்முறையான WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்ட்.. பைனலுக்கு முன்னேறியது MI

மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2025 தொடரின் பரபரப்பான சேலஞ்சர் போட்டியில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி, MI நியூயார்க் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய பொல்லார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

விம்பிள்டன்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சின்னர்

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, கார்லோஸ் அல்கராசுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

IND vs ENG: டிராவிட் சாதனையினை முறியடித்த ஜோ ரூட்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ராகுல் டிராவிட்டின் சாதனையினை முறியடித்துள்ளார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்.

பும்ரா ரிட்டன்.. டிங் டாங் பெல் அடித்த சச்சின்: தொடங்கியது லார்ட்ஸ் டெஸ்ட்!

லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.

ENG vs IND அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி. லண்டன் லார்ட்சில் இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.

’400 ரன்’ ரெக்கார்ட் யார் முறியடிப்பார்கள்? லாராவின் கணிப்பு இவர்கள் தான்..

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரவின் ”400 ரன்கள்” டெஸ்ட் ரெக்கார்ட்டினை யாரும் முறியடிக்காத நிலையில், லாரா ஒரு சில வீரர்களை கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

41 வயதில் காலமான ஐசிசி நடுவர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

ஐசிசி சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கேப்டன் பேச்சை கேட்காத ஜட்டு: அமைதியாய் சென்ற கில்.. வீடியோ வைரல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் பரிந்துரைத்த பீல்ட் செட்-அப்பினை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நிராகரித்தார். இதனால், அமைதியாக சுப்மன் கில் சென்றார். இதுத்தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்ன ப்ரோ? லாராவின் ’400 ரன் ரெக்கார்ட்’.. வாய்ப்பை மிஸ் செய்த முல்டர்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

44 -வது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ். தோனி.. ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

TNPL 2025: பைனலில் சொதப்பிய அஸ்வின்& கோ.. பட்டத்தை வென்ற திருப்பூர்!

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.

கேரளா கிரிக்கெட் லீக் போட்டி.. அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்!

கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற புதிய சாதனயை படைத்துள்ளார்.

Shubman Gill: 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுப்மன் கில் செய்த அரிய சாதனை!

Shubman Gill: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையினை நிகழ்த்தியுள்ளார். 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவீரர் இப்படி எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஜஸ்ட் மிஸ்ஸான 300.. சுப்மன் கில்லால் வலுவான நிலையில் இந்தியா!

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் 300 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் 269 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கில்லின் இரட்டை சதத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து – 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட (ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி) டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 2) பர்மிங்காமில் நகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இத்தொடரில் 1-0 என்ற நிலைமையில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

TNPL: மைதானத்திற்குள் புகுந்த பூச்சி.. வேப்பமர இலையால் புகைப்போட்டு விரட்டியடிப்பு

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Shamar Joseph: ஆஸி., டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்த கருப்பு தங்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்.. சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற 64-வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் மீட்டில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

4 கேட்சுகளை விட்டுட்டு இப்படி ஆடுறாரு? ஜெய்ஸ்வாலை தாக்கும் நெட்டிசன்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பீல்டிங் ரசிகர்களால் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.