தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையரை எதிர்ப்பு தீர்மானம் மற்றும் 33 % பெண்கள் இடஒதுக்கீடு தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.
இறுதியில், 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கான தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளித்ததால் அந்த தீர்மானம் எதிர்ப்பின்றி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், தொகுதி மறுவரைக்கான எதிர்ப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்புகள் இருந்திருந்தாலும், ஆதரவளித்தோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், அந்த ஆதரவளிப்போர் எண்ணிக்கை அதிகம் என்ற கணக்கில் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரிடம் திமுக கொறடா எ.வ.வேலு கொடுத்த சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில் அவர்,
"தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 4 கொடூர சம்பவம் நடந்துள்ளது. போதை பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் காவல்துறையின் பணி. ஆனால் போதை பொருள் விற்பனை செய்தவர்களை அழைத்து, புகார் சொல்லியவரின் விபரங்களை சொல்லியுள்ளனர்.
அந்த கோபத்தில் தான் கோவை கல்லூரி மாணவர் அமுதனை போதை கும்பல் அடித்து கொலை செய்ததாக, அவரின் பெற்றோர் ஊடகங்களில் பேட்டியளித்துள்ளனர். காவல்துறை ஏன் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்று இந்த அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். மாணவர் அமுதனின் கொலைக்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இடையில் குறுக்கிட்ட சபாநாயகர் ""திங்கள் கிழமை இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்து கொள்வதாக கூறியுள்ளோம். இதுபோதும்ங்க. நடந்த சம்பவம் அனைத்தையும் கூறிவிட்டீர்கள். திங்கள்கிழமை இதைப்பற்றி விரிவாக பேச அனுமதிக்கிறேன். நீங்கள் கொடுத்த தீர்மானத்தின்படி, கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் போதை பொருள் பயன்பாடு குறித்து புகாரளித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் என்பவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
மாணவருக்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். உங்கள் கவலைகளை சொல்லிவிட்டீர்கள். நாங்கள் எடுத்து கொள்கிறோம். முழு விபரத்தை சேகரித்து அரசு பதில் அளிக்கும். உங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு திங்கள் கிழமை பதில் வரும்" என்று கூறி எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திங்கட்கிழமை விவாதிப்போம் என்று சட்டப்பேரவை நேரம் முடிந்ததாக அறிவித்தார்.
அப்பொழுது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களும் "மேகமலை சுற்றியுள்ள 98 கிராமங்களின் மலைவாழ் மக்களை வெளியேற்றவேண்டும் என்ற சம்பவத்திற்கான"கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று நாங்களும் கொடுத்துள்ளோம்" என்று கூறினார். அதையும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
ஆதலால், திங்கட்கிழமையன்று காரசாரமான கவன ஈர்ப்பு தீர்மானம் இருப்பதால் அரசியல் களம் தற்போது சூடுபுடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LIVE 24 X 7