தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் இடையே இந்த காவிரி நீர் பிரச்சனை என்பது தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி 13 பேர் கொண்ட குழுவுடன் கர்நாடகா முதலமைச்சரை சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து பேச உள்ள நிலையில் இதனை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையிலும் இதை ஏற்க மறுத்து கர்நாடகா அரசு இதற்கு எதிராக நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் கூறியுள்ளது கண்டித்தக்கது என்றும், காவிரி ஆற்றுக்கு இடையே மேகதாது அணை கட்டுவது வன்மையாக கண்டித்தக்கது என்றும் கர்நாடகா அரசை எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து இது குறித்தான பேச்சுவார்த்தை என்பது தீர்வு தராது என்றும் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடியார் அதிமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத்தந்தோம். மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரு மாநில உறவுகளை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். டி.கே.சிவக்குமாரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்றும் உணர்வுப்பூர்வமான விவாதங்களில் விரிவான கருத்து பரிமாற்றம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதே கருத்தை பல அரசியல் தலைவர்களும் கூறி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்னும் வாய் திறக்காமல் மௌனப்புரட்சியை செய்து கொண்டு வருகின்றார். மேலும் மேகதாது விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.

LIVE 24 X 7