அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை மீண்டும் பரபரப்பு புகார்.

நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது மீண்டும் மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை மீண்டும் பரபரப்பு புகார்.
ஏற்கனவே திருமண மோசடி நடிகை சாந்தினி கொடுத்த குற்றச்சாட்டில் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டில் பெட்ரோல் பாம்ப் போட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நண்பர்கள் உறவினர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் நடிகை குற்றச்சாட்டு.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டு கிடைப்பதாக கூறி, தன்னுடைய வாழ்வாதாரத்தை கவனித்துக் கொள்வதாகவும் சொத்துக்கள் தருவதாகவும் கூறி மீண்டும் நம்ப வைத்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.

மோசடி செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது "நாடோடிகள்" நடிகை சாந்தினி மகளிர் ஆணையத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை
இரண்டாவது முறையாக ஆஜராக உத்தரவிட்டும் மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும் நடிகை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு.