காங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத்-பஜ்ரங் புனியா.. ஹரியானா தேர்தலில் போட்டியா?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாள் போராட்டமும் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் தரதரவென இழுத்து செல்லப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
LIVE 24 X 7