அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் வெளியுலகத் தொடர்பை இழந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
லோயர் சியாங் மாவட்டமே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நெல் வயல்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளும், தனியார் சொத்துகளும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆகஸ்டி ஜமோ தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "டபிர்போ சாகு, லோக்லு, ரோட்டே, ராமே, கோயு உள்ளிட்ட கிராமங்களுக்கான சாலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை. மாவட்ட நிர்வாகம், ராணுவம், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் மற்றும் எல்லை சாலை அமைப்புடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலை இணைப்புகளை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
பாதிக்கப்பட்ட ரோட்டே கிராமத்தைச் சேர்ந்தவரும், குருங் குமே மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான டேவிட் கோயு, "வெள்ளத்தில் கிராமத்தின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், நெல் வயல்கள், தோட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆடுகள், மாடுகள், பன்றிகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும் மக்கள் இழந்துள்ளனர். கிராம மக்கள் பலரும் வெளியே செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்" என்றார்.
மேலும், "வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமாகின. கிராமத்தின் தொங்கு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ரோட்டே கிராமம் முழுமையாக வெளியுலகத் தொடர்பை இழந்துள்ளது. குடிநீர் விநியோகம், மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலை இணைப்பு, தற்காலிக பாலம், உணவுப் பொருட்கள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, வடகிழக்கு மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
அசாமின் தேமாஜி, நல்பாரி, திப்ரூகர், சிரங், லக்கிம்பூர், கோக்ராஜார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 22,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,690 ஹெக்டேர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

LIVE 24 X 7