முதியவர் ஒருவரிடம் 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) செய்வதாக மிரட்டி, ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த விவகாரத்தில், ரோஹன் ஜாதவ் என்ற சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரை புனே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம், சிபிஐ அதிகாரிகள் போல நடித்த மர்ம நபர்கள் சிலர், பாதிக்கப்பட்ட முதியவரைத் தொடர்புகொண்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொய் கூறியுள்ளனர். மேலும், அவரை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி, சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10.74 கோடி தொகையைப் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்ப வைத்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், இது குறித்துக் காவல்துறையில் புகார் அளித்தார்.
வழக்கைப் பதிவு செய்த புனே காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். மோசடி பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்த நபரை வைத்து, ஹர்ஷத் சுபாஷ், சமர்த் சுரேஷ் மற்றும் அமர் சிவாஜி ஆகிய மூன்று பேரை முதலில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணத்தை எடுத்துத் தலைமறைவாக இருந்த இன்ஃபுளூயன்சர் ரோஹன் ஜாதவிடம் கொடுத்ததாக ஹர்ஷத் சுபாஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் ரோஹன் ஜாதவின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கியதால், வேறு வழியின்றி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த இவர், பிரபலங்களின் மேலாளராகவும் (Celebrity Management) பணியாற்றி வந்துள்ளார்.
முதியவரிடமிருந்து சுருட்டிய ரூ.10.74 கோடி பணத்தை, இவர் 5,436 வங்கி கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பியுள்ளார். மேலும், டெலிகிராம் செயலி மூலம் ஹாங்காங்கைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பில் இருந்து, கிரிப்டோகரன்சி வாயிலாகப் பணப் பரிவர்த்தனை செய்து பெரும்தொகையைக் கமிஷனாகப் பெற்றுள்ளார். தற்போது இவர் மீது புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய இடங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

LIVE 24 X 7