இந்தியா

பீகார் இடைத்தேர்தல்: பாஜக கோட்டையில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பீகார் மாநிலம் பங்கிபூர் இடைத்தேர்தல் வாகு இந்நிலை நடைபெறும் வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.

பீகார் இடைத்தேர்தல்: பாஜக கோட்டையில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!
Prashant Kishor
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், புதிய அரசியல் திருப்பமாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் பங்கிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. நீண்டகாலமாக பாஜகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பிரசாந்த் கிஷோர் பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 862 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 243 தொகுதிகளிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததுடன், வெறும் 3.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

பிரபல தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்கிப் போட்டியிடும் முதல் தேர்தல் இதுவென்பதால், இந்த இடைத்தேர்தல் நாடு தழுவிய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை நிலவரங்கள் மாற வாய்ப்புள்ள போதிலும், பாஜகவின் பாரம்பரியத் தொகுதியில் முதல் சுற்றிலேயே பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.