தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவிய தகவல்களுக்கு, அவர் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அங்குப் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று கூறியுள்ள அவர், தவெக தொண்டர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
'திருச்சி கிழக்கு' தர்மம் அல்ல;
திருச்சி கிழக்குத் தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்குப் பதிலளித்துள்ள லாரன்ஸ், "விஜய் சார் எப்போது ஹீரோவானாரோ, அன்று முதல் அவருக்காகப் போஸ்டர் ஒட்டி, கட்சி தொடங்கியதில் இருந்து உழைத்த தவெக தொண்டர்கள் பலர் திருச்சி கிழக்குத் தொகுதிக்காகக் காத்திருக்கிறார்கள். விஜய் சார் யாரை நிறுத்தினாலும் அங்கு வெற்றி நிச்சயம். அப்படியிருக்க, கட்சிக்காக உழைத்தவர்களைத் தாண்டி நான் அங்குப் போட்டியிடுவது தர்மம் இல்லை. ஒருவர் மரத்தை நட்டு வளர்த்து, அதில் வரும் பழத்தை வேறொருவர் சாப்பிடுவது சரியாக இருக்காது. கட்சியில் தொண்டராக இருந்து உழைத்து, தலைமை கொடுக்கும் பதவியை ஏற்பதே முறை" என்று தெரிவித்தார்.
விமர்சனங்களுக்குப் பதில்
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் தான் பேசிய 'தெரு நாய்கள் விவகாரம்' சர்ச்சையானதற்கும், "அரசியலுக்கு வருவதை மக்களிடம் ஏன் கேட்க வேண்டும்?" என்ற விமர்சனத்திற்கும் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். தன் சொந்தங்களிடம் கேட்பது போலத்தான் மக்களிடம் அனுமதி கேட்பதாகக் கூறிய அவர், "நான்கு பேருக்குச் சாப்பாடு போட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை; இதுவரை அரசியலுக்கு வருகிறேன் என்று கூட உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால் அதற்குள் சிலர் தவறாகக் குற்றஞ்சாட்டுவது மனதிற்கு வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7