சினிமா

இந்தியாவில் 500 கோடி: வசூலில் அடித்து நொறுக்கும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே உலகளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து நிலையில் இந்தியாவிலும் 500 கோடி வசூலை தாண்டி சாதனை.

இந்தியாவில் 500 கோடி: வசூலில் அடித்து நொறுக்கும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே
Spiderman Brand New Day hits 500 Crores
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே உலகளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து நிலையில் இந்தியாவிலும் 500 கோடி வசூலை தாண்டி சாதனை.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தியாவில் ஜூலை 30ஆம் தேதியே இப்படம் திரையிடப்பட்டது.

டாம் ஹாலண்ட் கதாநாயகனாகவும், ஜெண்டாயா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம், 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்பான மார்வெல் திரைப்பட வரிசையில் 38வது படமாகவும், ‘ஸ்பைடர்மேன்’ தொடரின் நான்காவது படமாகவும் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரமும் உற்சாகமும் கிடைத்துள்ளது. புதிய எதிரிகள், அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் ரூ.72 கோடி மொத்த வசூலை ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ குவித்ததாக படக்குழு அறிவித்த நிலையில், இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களின் அதிகபட்ச முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு இந்த சாதனை ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தின் வசம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இதே டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியான ‘தி ஓடிசி’ திரைப்படமும் இந்தியாவில் கவனம் பெற்ற நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ வெறும் மூன்று நாட்களிலேயே அதன் இந்திய வசூலை முந்தியது கவனத்திற்குரியது. இதனால் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, டிசி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘சூப்பர்மேன்’ மற்றும் ‘சூப்பர்கேர்ள்’ ஆகிய படங்களின் உலகளாவிய வசூலையும் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ சில நாட்களிலேயே அடித்து நொறுக்கியது.

‘சூப்பர்மேன்’ மற்றும் ‘சூப்பர்கேர்ள்’ ஆகிய இரண்டு படங்களும் இணைந்து சுமார் ரூ.7,100 கோடி வசூல் செய்த நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ரூ.8,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, ரூ.16,000 கோடி ($1.67 பில்லியன்) தாண்டி செல்லும் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே திரைப்படத்தால் இந்திய மார்வெல் ரசிகர்கள் அனைவரும் "மார்வெல் பயலுகடா" சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் ரூ.500 கோடி வசூல்?

இந்திய பாக்ஸ் ஆபிஸிலும் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் இந்தியாவில் இதுவரை ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படங்கள்

1. ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே – ரூ.500 கோடி
2. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் – ரூ.378 கோடி
3. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – ரூ.373 கோடி
4. அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் – ரூ.227 கோடி

இந்நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.16,000 கோடி ($1.67 பில்லியன்) வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியான சில நாட்களிலேயே வசூலில் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருவதாக கூறப்படும் இப்படம், வரும் நாட்களில் மேலும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.