உலகம்

வைரல் வீடியோ: அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ: அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!
US President Trump falls asleep during a cabinet meeting
அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று (டிசம்பர் 3, 2025) நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது தூங்கி வழிந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் 3 மணி நேரம் நீடித்த கூட்டத்தின்போது டிரம்ப் இவ்வாறு நடந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை கூட்டம் மற்றும் ஆலோசனைகள்

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, நேற்று வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்சேத் உள்ளிட்ட அனைத்து இலாகா அமைச்சர்களும் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம், பொருளாதார நடவடிக்கைகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

டிரம்ப் தூங்கியதாக எழுந்த சர்ச்சை

கூட்டத்தின்போது, மார்க் ரூபியோ உள்ளிட்ட அமைச்சர்கள் டிரம்பின் நிர்வாகத் திறன் குறித்தும், போர் நிறுத்த நடவடிக்கைகளில் அவரது இராஜதந்திரம் குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளனர். இருப்பினும், டிரம்ப் அதைக் காதில் வாங்காமல் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுள்ளார். ஒருசில சமயம் 15 வினாடிகளுக்கு மேல் கண்களை மூடியபடியே தலையைத் தொங்கவிட்டு அவர் தூங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

உடல்நலன் குறித்த கருத்துகளும் வெள்ளை மாளிகையின் மறுப்பும்

டிரம்புக்கு தற்போது 79 வயதாவதால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் இவ்வாறு தூங்கினார் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்களை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. டிரம்ப் நலமுடன் இருப்பதாகவும், 3 மணிநேர மாரத்தான் கூட்டத்தை அவர் வெற்றிகரமாகக் கையாண்டார் என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.