உலகம்

'நான் தான் வெனிசுலா அதிபர்': அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு!

நான் தான் வெனிசுலா அதிபர் என்று கூறும் வகையில் சமூக வலைதளத்தில் படம் ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

'நான் தான் வெனிசுலா அதிபர்': அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு!
US President Trump
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் தான் வெனிசுலாவின் அதிபர் என்று கூறும் வகையில் சமூக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது, வெனிசுலா மக்கள் மத்தியிலும் அதன் அண்டை நாடுகள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரோ கைது பின்னணி

போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில், ஜனவரி 3 ஆம் தேதி தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நுழைந்த அமெரிக்க ராணுவத்தினர், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை கைது செய்தனர். தற்போது அதிபர் மதுரோ அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.

டிரம்பின் நேரடிக் கட்டுப்பாடு

மதுரோ கைதுக்குப் பின், வெனிசுலாவின் நிர்வாகத்தை அதிபர் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார். கச்சா எண்ணெயை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்படப் பல நிபந்தனைகளையும் டிரம்ப் விதித்துள்ளார். இதன் மூலம் வெனிசுலா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படம் ஒன்றைப் பதிவிட்டு, அதன் கீழே ஆங்கிலத்தில் "Acting President of Venezuela" (வெனிசுலாவின் இடைக்கால அதிபர்) என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். நான் தான் வெனிசுலா அதிபர் என்று டிரம்ப் வெளிப்படையாக அறிவித்திருப்பது, வெனிசுலா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெனிசுலாவின் அண்டை நாடுகளும் டிரம்பின் இந்த நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.