ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ஆபரேசன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேல் மீது ஈரானும் தொடர் தாக்குதலை தொடுத்தது. ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் மோதல் நிலவி வந்த நிலையில், ஈரான் தலைநகரின் இருந்து மக்கள் வெளியேறும்படி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கின. இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகர தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் பர்தவ், நடான்ஸ், மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார். இதை செய்யக்கூடிய வேறு எந்த ராணுவமும் உலகில் இல்லை எனவும் தற்போதே அமைதிக்கான நேரம் எனவும் அவர் கூறினார். செங்கடலில் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அணுசக்தி நிலையத்தை தாக்குவது போரின் முடிவு அல்ல - ஆரம்பம் என அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முன்னெச்சரிக்கை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போர் காரணமாக ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 430ஆக அதிகரித்துள்ளது. 290 இந்தியர்கள் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில், ஆபரேசன் சிந்து மூலம் இதுவரை ஆயிரத்து 117 பேர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









