அதன் பின்னர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படமான தனது சினிமா வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக இருக்கும் என்று அறிவித்தார். அப்போது முதலே நடிகர் விஜயின் ரசிகர்கள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் இன்று (ஜூன் 22 ) ஆம் தேதி, தன்னுடைய 51-வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜயின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்தது. அதன்படி சரியாக 12 மணிக்கு ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டது.
ஜனநாயகன் திரப்படத்தின் FIRST ROAR வெளியான 15 நிமிடங்களில் Youtube-ல் 1 மில்லியனுக்கும் மேலான ரியல் டைம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் இதனை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தேர்தல் நெருங்கி வருவதால், ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்து மற்றப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் உள்ளதால், அத்திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
https://youtu.be/wf95h_UCZ4w?si=IpBs-LuTdLkw2q9W
LIVE 24 X 7









