உயிரிழப்பு மற்றும் மீட்புப் பணிகள்
திடீரென ஏற்பட்ட நில அதிர்வை உணர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பீதியடைந்து வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடினர். நிலநடுக்கத்தின் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தில் அங்குள்ள சில கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், மொத்தம் 31 பேர் உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாத நிலையில், தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்க பீதியில் உறைந்துள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
பாரம்பரியச் சின்னத்திற்கு சேதம்
இந்த நிலநடுக்கத்தில், நகரத்தின் அடையாளமாக விளங்கிய, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியச் சின்னமான செயிண்ட் பீட்டர் அப்போஸ்தலர் தேவாலயம் (Parish of Saint Peter the Apostle) பகுதியளவில் இடிந்து விழுந்தது. சிலுவேட்டுடன் தேவாலயத்தின் முகப்புப் பகுதி இடிந்து விழும் காணொளி, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
⚡️Powerful M6.9 Earthquake Rocks Philippines 🇵🇭 - Tremors Knockout Lights at Church on Bantayan Island pic.twitter.com/TtVxqJH0V3
— RT_India (@RT_India_news) September 30, 2025
மேலும், நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள் (Aftershocks) நிகழ வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வருவதால், மக்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நகர நிலநடுக்கவியல் மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு, தீவிர நில அதிர்வு மண்டலமான 'பசிபிக் நெருப்பு வளையத்தில்' (Pacific Ring of Fire) அமைந்திருப்பதால், அங்கே நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









