Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News
Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News
Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News
சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்தும், 234 தொகுதிகளிலும் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் குறித்தும் நடிகர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ. 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை செலுத்த சொல்லி நோட்டீஸ் வந்ததால், அதிர்ந்து போன வாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்,
பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து என் எல் சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகரில் கூவம் ஆற்றில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பச்சிளம் சிசுவை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.