K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=1075&order=created_at&post_tags=over

#BREAKING | "பிரதமர், ஆளுநர், முதலமைச்சருக்கு நன்றி"

பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

பாடகி சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது | Kumudam News 24x7

பாடகி சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING | மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

#BREAKING: சர்ச்சை பேச்சு.. மகாவிஷ்ணு வழக்கில் புதிய திருப்பம்

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

பேருந்தில் நடத்துனருக்கு கத்திக்குத்து..பயணிகளை அலறவிட்ட இளைஞர்!

பெங்களூருவில் பேருந்துக்குள் நடத்துனருக்கு கத்திக்குத்து.

"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி

"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை பயன்படுத்திய செவிலியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

32,500 பேருக்கு ஊதியம் கொடுக்கல.... மாநில அரசு என்ன பண்ணுது? - ராமதாஸ் கேள்வி

மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என பாமக நிறுவனம் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்... தி.மலையில் உச்சக்கட்ட பரபரப்பு

திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லட்டு சர்ச்சை: சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிக நிறுத்தம்..ஏன் தெரியுமா?

Tirupati Laddu Controversy : திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Gandhi Mandapam : காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்.. அதிர்ச்சியடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

Chennai Gandhi Mandapam : காந்தி மண்டபத்தில் தூய்மை செய்யும் பணியின்போது மது பாட்டில்களையும் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர் களுடன் சர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கிடந்த மதுபாட்டில்களை கண்டு அதிருப்தி அடைந்தார்.

#BREAKING : மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு

One Nation One Election : ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை!

One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து வரியை மீண்டும் உயர்த்திய திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மதசார்பின்மை குறித்து ஆளுநர் பேச்சு – அமைச்சர் ரகுபதி கண்டனம்

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Savukku Shankar Case : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று  குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் அறிவாளி.. ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதியா?.. ஹெச்.ராஜா அதிரடி

மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம் – தலைமை ஆசிரியர்கள் மீண்டும் பணியிட மாற்றம்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.