ஒட்டு போட்டவர்களுக்கு போட்டு அனுப்புறாங்க.. மார்கெட்டிங் தான் நடக்குது - தமிழிசை தாக்கு
திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு உதவ மெகா ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் கார்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் அருகே உள்ள கண்மாய்களும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் NDRF வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் 2 நாட்களாக வடியாத மழைநீர்.
கனமழை பெய்யும் மாவட்டங்களில் தெற்கு ரயில்வ்பே சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வரும் பகுதிகளில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை விநியோகம் செய்ய தமிழக் அரசு திட்டம்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்.
சென்னை ராமாபுரத்தில் வெள்ளநீர் புகுந்த வீட்டுற்குள் சிக்கித் தவித்த 85 வயது மூதாட்டி மீட்பு.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் 12 காவல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பால் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஆவின் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.