K U M U D A M   N E W S

kal

சாய் சுதர்சனுக்கு காயம்: மீண்டும் இந்தியா அணியில் சர்பராஸ் கான்

இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

பிள்ளை போல வளர்த்தேனே..! மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய பெண் | Kallakurichi | Kumudam News #shorts

பிள்ளை போல வளர்த்தேனே..! மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய பெண் | Kallakurichi | Kumudam News #shorts

"இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

"த.வெ.க.வுடன் கூட்டணி இல்லை" - பா.ம.க திலகபாமா பாய்ச்சல்

பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.

ராமதாஸை பழிதீர்க்கும் ரங்கசாமி? "பலிகடா ஆகும் ஸ்ரீகாந்தி"

டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

குரங்கு போல நடந்த நபர்..! வைரல் வீடியோ | Puducherry Weird Man | Kumudam News | #shorts

குரங்கு போல நடந்த நபர்..! வைரல் வீடியோ | Puducherry Weird Man | Kumudam News | #shorts

கொட்டும் மழையில் வலம் வந்த கல்யாண சண்முகநாதர்! | Myladuthurai | Aadi Karthigai | Kumudam News |

கொட்டும் மழையில் வலம் வந்த கல்யாண சண்முகநாதர்! | Myladuthurai | Aadi Karthigai | Kumudam News |

"இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

?KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK