விளையாட்டு

சாய் சுதர்சனுக்கு காயம்: மீண்டும் இந்தியா அணியில் சர்பராஸ் கான்

இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

சாய் சுதர்சனுக்கு காயம்:  மீண்டும் இந்தியா அணியில் சர்பராஸ் கான்
Sarfaraz khan reclaims place in india after sai sudharsan leg injury
இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19-ம் தேதி வரை காலேவில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27-ம் தேதி வரை கொழும்பில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 - 27 தொடரின் ஒரு பகுதியாகும். தற்போது வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இலங்கை 41.67 சதவீத புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இதனால் இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் உயர்மட்டப் பயிற்சி மையத்தில் சாய் சுதர்சன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தபோதிலும், ஆகஸ்ட் 15 அன்று காலியில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் குணமடைய வாய்ப்பில்லை என மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இதனால் அவர் தொடரிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கானுக்கு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்,சர்பராஸ் கான் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம், 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக 2024ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 150 ரன்கள் விளாசியிருந்தார். மேலும் இந்த ஆண்டு உள்நாட்டுப் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 429 ரன்கள் குவித்து சிறந்த ஃபார்மில் உள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சாய் சுதர்சன் இல்லாத நிலையில், தேவ்தத் படிக்கல் 3-ஆம் இடத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளது. கொழும்பில் நடைபெற்ற இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 142 ரன்கள் குவித்து அசத்திய தேவ்தத் படிக்கல், 3வது வரிசையில் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. இதனால் சர்ஃபராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை அவருக்கு அணியில் இடம் கிடைத்தால் 5 அல்லது 6ஆவது வரிசையில் பேட்டிங் ஆடுவார்.

அதேவேளையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பயிற்சி ஆட்டத்தின் போது விரலில் காயம் அடைந்ததால், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாத இந்திய கேப்டன் சுப்மன் கில், 2வது இன்னிங்ஸில் களம் இறங்கி பேட்டிங் செய்தார். இது இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய அணி ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரில் இடம் பெறாத நிலையில், சாய் சுதர்சனும் விலகியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மீதமுள்ள வீரர்களின் பயிற்சி ஆட்டங்களின் பெர்பார்மன்ஸ் இந்தியா கிரிக்கெட் ரசிகர்களை ஆறுதலடைய செய்கிறது.