கமலின் ‘சண்டியர்’ தலைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், 2014-ல் இதே பெயரில் வெளியான படத்துக்கு எதிர்ப்பு எழாதது ஏன்? இந்த சர்ச்சையின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நடிகர் கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!
தமிழக அரசியலை மிகவும் ஆழ்ந்து கவனித்து வருகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. சமீபத்தில் கவர்னரை சந்தித்து, குதிரை பேரப் புகார் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாடிவிட்டு வந்திருப்பவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும் அந்த வரலாற்று மாற்றத்திற்கான அச்சாணியாகப் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.