K U M U D A M   N E W S

தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?

அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.

வெள்ளிங்கிரி மலை ஏற இனி அனுமதி கிடையாது.. வனத்துறை அறிவிப்பு!

கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உதைகையில் கோடை சீசன் நிறைவு.. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு!

ஞாயிறு விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையில் பூங்காவை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

இபிஎஸ் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

தேமுதிகவுக்கு சீட்டு கொடுக்காத அதிமுக... திமுகவுக்கு நன்றி சொன்ன பிரேமலதா

திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்... அல்லோலப்படும் மக்கள்

அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

வணிக சிலிண்டர் விலை ரூ.25 குறைவு

சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

சேலத்தில் வீட்டின் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்...வட மாநில இளைஞர்கள் செயலால் பரபரப்பு

கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை கைது செய்தனர்