அக்டோபரை விட நவம்பரில் அதி கனமழை.. இப்போதே எச்சரித்த வெதர்மேன்
அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பால் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஆவின் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கால மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறை அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். குமுதம் சேனலுக்காக தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் இது வட தமிழ்நாடு, புதுச்சேரியையொட்டி தெற்கு பகுதியில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம்
நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
"வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை” - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டடதாக மாநகராட்சி தகவல்
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடரும் மழை
கொட்டித்தீர்க்கும் கனமழை - வீடுகளுக்குள் பாயும் வெள்ள நீர்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
Tamil Nadu Rain Update : தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..