தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரையோரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் இன்று நடைபெறும் ஜூடோ இறுதி போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், இறுதி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பரிசு தொகை வழங்கினார்.
இதையும் படிங்க: மீண்டும் படையெடுத்த ஓவியா ஆர்மி.. திணறும் சோசியல் மீடியா.. என்ன காரணம்?
3ஆம் இடம் பிடித்தவருக்கு வெண்கல பதக்கம் மற்றும் 50 ஆயிரம் பரிசுத்தொகையும், 2ஆம் இடம் பிடித்தவருக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும், முதலிடம் பிடித்தவருக்கு தங்க பதக்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழை தொடர்பாக மூன்று மாதங்களாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ளது. வானிலை ஆய்வாளர்கள் நாளையிலிருந்து அதிக மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். வட கடலோர மாவட்டங்கள் அதிக கனமழை இருக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்
அதன் அடிப்படையில் முதலமைச்சர் என்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளுக்கு என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக மக்களே உஷார்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
இந்த முறை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. மழை வந்தாலும் முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தங்க வைக்க உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...
சென்னையை பொருத்தவரையில் படகுகள் தயார் நிலையில் உள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட கடலோரத்தில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வரை மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் தண்ணீர் தேங்கிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுக்கப்பட்டு அந்த இடங்களில் மின் மோட்டார்கள் போன்றவை தயார் நிலையில் உள்ளது. முகத்துவார பணிகளில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது” என்றார்.
LIVE 24 X 7









