K U M U D A M   N E W S
Kumudam Ad

தப்பியோடிய கைதி –அதிரடியாக சுற்றிவளைத்த போலீசார்

வேலூரில் தப்பியோடிய தண்டனைக் கைதி பாபு ஷேக்(55) பிடிபட்டார்

குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி-க்கு உற்சாக வரவேற்பு.

நோட்டீஸ் வழங்கிய மாணவர்கள் – எச்சரித்த காவல்துறையினர்

திருப்பரங்குன்றத்தின் பெருமைகளை பாதுகாப்போம் என நோட்டீஸ் வழங்கிய மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்.

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

உச்சம் தொட்ட தங்கம் விலை.., இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கு விற்பனை.

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை, அரிமளம் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோவில் கைது.

மீனவர்களுக்கு ஆதரவு – மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

காரைக்கால் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்.

பழுதான கனரக வாகனம் - நெடுஞ்சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.