K U M U D A M   N E W S

தமிழக அரசியல்

"முதல்வர் திறந்த 3 கோப்புகளில் ஒரு விக்கெட் OUT"....திமுகவை விளாசிய நிர்மல் !

முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

அன்பில் மகேஷ் கைது : "மக்களின் கோபத்தைத் திசைதிருப்ப முடியாது!" - ஸ்டாலின் அதிரடி!

அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

"தற்குறி முதல்வர் விஜய்க்கு நன்றி " - ஜாமினில் வெளிவந்த நாதக கார்த்திகா விமர்சனம் !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரப் பாதை மறியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கோவை சிறை வாசலில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்திகா தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்! – கார் வாங்க தமிழக அரசு போட்ட புது கணக்கு!

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

கார்த்திகா கைது... பின்னணி என்ன? போலீஸ் கொடுத்த ‘முழு விளக்கம்’!

தாராபுரம் இடைத்தேர்தலின்போது தேர்தல் விதிமீறல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

‘Virtual வாரியர்ஸ்’ Vs மேயர் பிரியா.. AI வீடியோ சர்ச்சையால் வெடித்த அரசியல் மோதல்!

சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.

'கட்சியா இல்லை NARCOS கூடாரமா ? ' - உதயநிதி காட்டம் !

நாகையில் போதைப்பொருள் விவகாரம் மற்றும் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘கட்சியா இல்லை NARCOS கூடாரமா?’ என கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் .

அதிமுகவில் தனுஷ்? இருகரம் கூப்பி வரவேற்போம்… ராஜேந்திர பாலாஜி போட்ட போடு!

தனுஷைச் சுற்றி அரசியல் களத்தில் பரவும் பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அதிமுக தரப்பிலிருந்து வந்துள்ள எதிர்பாராத கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

'EPS எதிராக என் வீட்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை' - வேலுமணி விளக்கம் !

அதிமுகவை விட்டு வெளியேறுவது குறித்த தகவல்கள், ஈபிஎஸ் தலைமையிலான ஒற்றுமை முயற்சி, இடைத்தேர்தல் தோல்வி எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

பெரியார் அறிவுலகம் விவாதம் : 'அழுக்காறு உடையார்க்கு' என்ற குறளை வைத்தே ஸ்டாலினை விளாசிய ஆதவ் !

கோவையில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆதவ் அர்ஜுனா கடுமையாகப் பதிலளித்துள்ள நிலையில், முந்தைய ஆட்சித் திட்டங்கள், விளம்பர அரசியல், கொளத்தூர் தேர்தல் தோல்வி எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.