காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.
HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த ஈரானி கொள்ளையர்கள் 3 பேர் சினிமா பாணியில் கைது; தேசிய அளவில் கைவரிசை காட்டிய கும்பலை மடக்கிய கோவை தனிப்படைக்குக் குவியும் பாராட்டு!
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
மகளை கொன்று நாடகமாடி தந்தையை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
பாதை பிரச்சனையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை கொண்டு தடுத்தும் கம்புகளை கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.