அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில், 'பி-52' (B-52) ரகக் குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த விமானப்படைத் தளத்திலிருந்து, வழக்கமான சோதனை ஓட்டத்திற்காக முற்பகல் 11:20 மணியளவில் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் விமானம் புறப்பட்டது. ஆனால், டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே விமானம் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். "நாம் எட்டு சிறந்த அமெரிக்கர்களை இழந்துவிட்டோம்" என எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தின் துணைத் தளபதி ஜேம்ஸ் ஹேய்ஸ் தெரிவித்துள்ளார்.
விமானப்படை தளம் மூடல் மற்றும் விசாரணை
விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று பணிகளை மேற்கொண்டனர். அவசரகால மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, எட்வர்ட்ஸ் விமான ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு வரவிருந்த மற்ற விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கான பார்வையாளர் அனுமதிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட வான்வழிப் புகைப்படங்கள் விமானம் முற்றிலும் தீக்கிரையாகி அழிந்துள்ளதைக் காட்டும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் பி-52
அமெரிக்க விமானப்படையின் மிக முக்கிய கனரகப் போர் விமானமான பி-52, 1954 முதல் சேவையில் இருந்து வருகிறது. சோவியத் ஒன்றியத்துடனான போருக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ராட்சத விமானம், பனிப்போர் காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 8,800 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இவிமானம், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் வல்லமை பெற்றது. வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சமீபத்திய ஈரான் மோதல்கள் வரை பல்வேறு போர்க்களங்களில் அமெரிக்கா இந்த விமானத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7